/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிவபெருமான் கோவில்களில் இன்று மஹா சிவராத்திரி
/
சிவபெருமான் கோவில்களில் இன்று மஹா சிவராத்திரி
ADDED : மார் 08, 2024 12:32 PM
மாமல்லபுரம்:சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என, ஆண்டு முழுதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில், மஹா சிவராத்திரி விரதம் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. ராத்திரி என்ற சொல்லுக்கு, அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள்.
உயிர்கள் செயலற்று, ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.
இந்நாளை முன்னிட்டு, சிவபெருமான் கோவில்களில், இன்று மாலை துவங்கி நாளை காலை வரை மஹா சிவராத்திரி உற்சவம், நான்கு கால சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாட்டுடன் நடக்கிறது.
திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர், ருத்ரகோடீஸ்வரர்; மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரர், தொல்லியல் வளாக மகாலிங்கேஸ்வரர்; கல்பாக்கத்தில் ஏகாம்பரேஸ்வரர்.
சதுரங்கப்பட்டினத்தில் திருவரேஸ்வரர் வெள்ளீஸ்வரர்; கூவத்துாரில் திருவாலீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் உற்சவம் நடைபெறுகிறது.

