/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மகளிர் திட்ட அலுவலகத்திற்கு ரூ.3.50 லட்சத்தில் கழிப்பறை
/
மகளிர் திட்ட அலுவலகத்திற்கு ரூ.3.50 லட்சத்தில் கழிப்பறை
மகளிர் திட்ட அலுவலகத்திற்கு ரூ.3.50 லட்சத்தில் கழிப்பறை
மகளிர் திட்ட அலுவலகத்திற்கு ரூ.3.50 லட்சத்தில் கழிப்பறை
ADDED : பிப் 06, 2025 11:58 PM
திருப்போரூர் திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்படுகிறது.
இதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் வாயிலாக, கிராம ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், திறன் வளர் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்காக, திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளிலிருந்து, மகளிர் குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்திற்கு, பயிற்சி மற்றும் ஆலோசனைகளுக்கு வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் உட்பட பயிற்சிக்கு வரும் பெண்கள் என, அனைவரும் சிரமப்பட்டனர்.
அவசரத்திற்கு, அருகே உள்ள பி.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.
எனவே, பெண்களின் நலனை கருதி, மேற்கண்ட அலுவலகத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், மேற்கண்ட அலுவலகத்தை ஒட்டி புதிய கழிப்பறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நிர்வாகம் தெரிவித்து உள்ளது.