/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு 'டோக்கன்'
/
நந்திவரத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு 'டோக்கன்'
நந்திவரத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு 'டோக்கன்'
நந்திவரத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு 'டோக்கன்'
ADDED : ஜன 07, 2024 11:23 PM
கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் ரேஷன் கடை வாயிலாக, தமிழக அரசின் பொங்கல் தொகுப்புடன், ௧,௦௦௦ ரூபாய் வழங்கப்படுகிறது.
இதற்கான பயனாளிகள், கூட்ட நெரிசல் இன்றி பெறுவதற்கு வசதியாக, டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கலுக்கு முன்பே ௧,௦௦௦ ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு ஒன்று வழங்கப்பட உள்ளது.
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று முதல் வீடு வீடாக சென்று, டோக்கன் வினியோகம் செய்ய துவங்கினர்.
நேற்று, 21வது வார்டுக்கு உட்பட்ட முத்துமாரியம்மன்கோவில் தெருவில், அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
அந்த டோக்கனை பெற்றுக் கொண்ட பயனாளிகள், எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கான ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.