/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 27.47 லட்சம்! ஆண்களை விட பெண்கள் 31,000 பேர் அதிகம் 16,000 பேர் நீக்கம்
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 27.47 லட்சம்! ஆண்களை விட பெண்கள் 31,000 பேர் அதிகம் 16,000 பேர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 27.47 லட்சம்! ஆண்களை விட பெண்கள் 31,000 பேர் அதிகம் 16,000 பேர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 27.47 லட்சம்! ஆண்களை விட பெண்கள் 31,000 பேர் அதிகம் 16,000 பேர் நீக்கம்
ADDED : ஜன 07, 2025 07:31 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், 27 லட்சத்து 47,550 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் 31,223 பேர் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 16,375 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். புதிதாக 37,749 பேர் இணைந்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் அருண்ராஜ் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி பெற்றுக்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி 2025 ஜன., 6ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் தனி, மதுராந்தகம் தனி ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இப்பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகம், மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகம், சென்னை தாம்பரம் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட 2,826 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள, 798 பள்ளிகளிலும், மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியல், ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் உள்ளது.
இப்பட்டியலை வாக்காளர்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
புதிய வாக்காளர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏப்., ஜூலை, அக்டோபர் மாதங்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர், இன்று முதல் அனைத்து வேலை நாட்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்களை அளிக்கலாம்.
மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் voter helpine APP எனும் செயலி வாயிலாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
16,000 பேர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்படி, கடந்தாண்டு, 98,701 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இதில், பெறப்பட்ட மனுக்களின்படி, 16,375 பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.புதிதாக 48,945 பேர் இணைக்கப்பட்டு உள்ளனர். திருத்தம் 32,124 பேர். 18 வயது முதல் 19 வயது வரை, 37,749 பேர், முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.
சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றில், 1,257 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.