/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பையனுாரில் பயணியர் நிழற்குடை சினிமா அமைப்பினர் அமைப்பு
/
பையனுாரில் பயணியர் நிழற்குடை சினிமா அமைப்பினர் அமைப்பு
பையனுாரில் பயணியர் நிழற்குடை சினிமா அமைப்பினர் அமைப்பு
பையனுாரில் பயணியர் நிழற்குடை சினிமா அமைப்பினர் அமைப்பு
ADDED : அக் 21, 2025 11:25 PM

மாமல்லபுரம்: திரைப்பட அமைப்பின் சார்பில், பையனுாரில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
மாமல்லபுரம் அடுத்த, பையனுார் ஊராட்சி பகுதியில், கலைஞர் திரைப்பட நகரம் அமைந்துள்ளது.
இங்குள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, தமிழக அரசு நீண்டகால குத்தகை அடிப்படையில், திரையுலகின் பல்வேறு அமைப்பினருக்கு அரசு வழங்கியுள்ளது.
அங்கு படப்பிடிப்பு நடைபெறுகின்றன. மேலும், திரையுலக தொழிற்சங்கத்தினருக்கு குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து, திரைப்பட நகரம் செல்லும் சாலை இணையும் சந்திப்பு பகுதியில், பயணியர் நிழற்குடை அமைக்குமாறு, 'பெப்சி' என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பினரிடம், இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
அந்த அமைப்பினர் பரிசீலித்து, தற்போது ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் நிழற்குடை அமைத்துள்ளனர்.