/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரையில் சுகாதார வளாகம் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
/
கடற்கரையில் சுகாதார வளாகம் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
கடற்கரையில் சுகாதார வளாகம் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
கடற்கரையில் சுகாதார வளாகம் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : டிச 08, 2024 08:29 PM
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பம் பகுதியில், மீனவர்கள் படகு நிறுத்தும் இடம் உள்ளது.
இங்கு கடப்பாக்கம் குப்பம், ஆலம்பரை குப்பம் ஊத்துக்காட்டு அம்மன் பகுதி மற்றும் ஆலம்பரை குப்பம் தண்டுமாரியம்மன் பகுதி ஆகிய மூன்று பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தங்கள் நாட்டுப் படகுகளை நிறுத்துகின்றனர்.
கடலில் பிடிக்கப்படும் மீன்களை தரம் பிரித்தல், ஏலம் விடுதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற பணிகளும், இப்பகுதியில் செய்யப்படுகின்றன. அதனால், தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும், கடப்பாக்கம் கடற்கரையில் குளிப்பதற்காக, சுற்றுலாப் பயணியரும் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால், மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆண்கள், மீன் விற்பனை செய்யும் பெண்கள் மற்றும் சுற்றுலா பயணியர் இயற்கை உபாதைகளை கழிக்க கடும் சிரமப்படுகின்றனர்.
இதனால், துறை சார்ந்த அதிகாரிகள், கடப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.