/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கலில் 'டூவீலர் பார்க்கிங்' சுற்றுலா பயணியர் வேண்டுகோள்
/
வேடந்தாங்கலில் 'டூவீலர் பார்க்கிங்' சுற்றுலா பயணியர் வேண்டுகோள்
வேடந்தாங்கலில் 'டூவீலர் பார்க்கிங்' சுற்றுலா பயணியர் வேண்டுகோள்
வேடந்தாங்கலில் 'டூவீலர் பார்க்கிங்' சுற்றுலா பயணியர் வேண்டுகோள்
ADDED : ஜன 24, 2025 12:41 AM

மதுராந்தகம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சுற்றுலா வரும் பயணியர், தங்களின் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த வேடந்தாங்கல் ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்ட ஏரி, முழு கொள்ளளவு நிரம்பியது.
தற்போது இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன.
சாம்பல் நாரை, கூழைக் குடா, கரண்டிவாயன், நத்தை குத்தி நாரை, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், முக்குளிப்பான், புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன.
தற்போது, 30,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
இந்த பறவைகளை பார்வையிட சுற்றுலா வரும் பயணியர், தங்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் இல்லாமல், சிரமப்படுகின்றனர்.
வேடந்தாங்கல் ஏரிக்கரையின் தொடக்கப் பகுதியில், காலியிடம் உள்ளது.
இந்த இடத்தில் முட்புதர் வளர்ந்து, புதர் மூடியுள்ளது.
எனவே, இந்த முட்புதரை அகற்றி, அப்பகுதியில் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், பறவைகளை பார்வையிட்டு வெளியே வரும் சுற்றுலா பயணியர், 'செல்பி' எடுத்து மகிழும் வகையில், 'ஐ லவ் வேடந்தாங்கல்' பதாகை அமைக்க, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

