/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு வங்கியில் டிராக்டர் விவசாய பணிக்கு ஒப்படைப்பு
/
கூட்டுறவு வங்கியில் டிராக்டர் விவசாய பணிக்கு ஒப்படைப்பு
கூட்டுறவு வங்கியில் டிராக்டர் விவசாய பணிக்கு ஒப்படைப்பு
கூட்டுறவு வங்கியில் டிராக்டர் விவசாய பணிக்கு ஒப்படைப்பு
ADDED : ஜன 29, 2025 07:03 PM
மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எல்.எண்டத்துார் ஊராட்சியில், கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியில், விவசாயமே மிக முக்கிய தொழில்.
விவசாயிகள் உழவு பணிக்காக, எல்.எண்டத்துார் கூட்டுறவு வங்கி கிளையில், சொந்தமாக டிராக்டர் வாகனம் வேண்டி, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
அதன்படி நேற்று, விவசாயிகள் குறைந்த கட்டணத்தில் பயன்பெறும் வகையில், எல்.எண்டத்துார் கூட்டுறவு வங்கி கிளைக்கு, புதிய டிராக்டர் வாகனம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாகனத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  ராமாபுரம், வேடந்தாங்கல், வெள்ளப்புத்துார், எல்.எண்டத்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இந்த டிராக்டரால் பயன்பெறுவர்.
விவசாய பணிக்கு வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், வேளாண் உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம்.