/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மதுராந்தகத்தில் வியாபாரிகள் அவதி
/
குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மதுராந்தகத்தில் வியாபாரிகள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மதுராந்தகத்தில் வியாபாரிகள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மதுராந்தகத்தில் வியாபாரிகள் அவதி
ADDED : ஆக 22, 2025 09:55 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக மின் சாதனங்கள் பழுதாகி வருவதால், தடையின்றி மின்சாரம் அளிக்க வேண்டுமென, வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் நகராட்சிக்கு, சூரக்கோட்டை பகுதி மின் நிலை யத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், செங்குந்தர்பேட்டை, அருளாலீஸ்வரர் கோவில் தெரு, உக்கம்சாந்த் சாலை பகுதியில், 700க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் மின் இணைப்பு உள்ளது.
இதில், வீடுகள், கடை களுக்கு செல்லும் மின்சாரத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, அடிக்கடி மின்சாதனங்கள் பழுதாகின்றன.
தரமான மின் மாற்றி இல்லாததால், அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
குறைந்த மின்னழுத்த பிரச்னையால், மின் சாதன பொருட்களான 'டிவி', குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, அயன் பாக்ஸ், 'ஏசி' உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்து வருகின்றன.
பகல் நேரங்களில் மின் பற்றாக்குறை, குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் சாதனங்கள் பழுதாகி பொருட்செலவு ஏற்பட்டு வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறையினர், சீரான மின்வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.