/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறநிலையத்துறையில் மரபுக்கலை பணிவாய்ப்பு
/
அறநிலையத்துறையில் மரபுக்கலை பணிவாய்ப்பு
ADDED : பிப் 18, 2024 02:36 AM
மாமல்லபுரம் : தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை, மாநிலத்தில் உள்ள சைவ, வைணவ சமய கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.
நீண்டகாலமாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ள பழமையான கோவில்களை, பாரம்பரிய முறையில் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்கிறது.
இந்நிலையில், கோவில்களில் உள்ள மரபு ஓவியங்களை புனரமைத்து பாதுகாக்க, அத்துறை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, மூலிகை சுவர் ஓவியங்களை பாதுகாக்க கருதி, தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர், மரபு ஓவிய புனரமைப்பாளர், சுவடிகள் பாதுகாக்க, சுவடியியல் வல்லுனர் என, தலா ஒருவரை நியமிக்க உள்ளது.
மேலும், ஆன்மிக நுால்களை பதிப்பிக்க, துணை ஆசிரியர், கணினி வல்லுனர், மின்படியாக்க தொழில்நுட்ப வல்லுனர், ஆய்வுக்கூட உதவி யாளர், ரசாயன கருவிகளை சுத்தம் செய்பவர் என, தலா ஒருவரை நியமிக்கிறது.
இப்பணிகளுக்கு, மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவித்துள்ளது. தகுதி மற்றும் பிற விபரங்களை, https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.