/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மேலமையூரில் போக்குவரத்து நெரிசல்

ADDED : பிப் 18, 2024 05:23 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக ரீதியான கடைகள் உள்ளன.
செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில், மேலமையூர் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதி சர்வீஸ் சாலையில், வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், காலை மற்றும் இரவு நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம், இப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இன்றி, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.