/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 25, 2025 11:12 PM

செய்யூர் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி நடக்கிறது.
நேற்று காலை 11:00 மணியளவில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு இருந்த லாரி, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதால், மின்கம்பிகள் அறுந்து கிழக்கு கடற்கரை சாலை நடுவே விழுந்தன.
பின், சாலையில் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, சாலையிலிருந்து மின் கம்பிகளை அகற்றினர்.
அதன் பின், கிழக்கு கிழக்குச் சாலையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.இதனால், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.