/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
/
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 31, 2025 03:15 AM
தாம்பரம்:விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தாம்பரம் காவல் துறை செய்திக்குறிப்பு:
வேளச்சேரி பிரதான சாலையில், சந்தோஷபுரம் பகுதியிலிருந்து, செம்மொழி சாலை மற்றும் மாம்பாக்கம் செல்லும் வாகனங்கள், மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக திரும்பி, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பில் 'யு - டர்ன்' எடுத்து, மேடவாக்கம் மேம்பால அணுகு சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, செம்மொழி சாலையில் வலதுபுறம் திரும்பி, மாம்பாக்கம் செல்லலாம்
ஓ.எம்.ஆர்., சாலையில், சோழிங்கநல்லுார் சந்திப்பில் இருந்து, தாம்பரம் - பள்ளிக்கரணை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள், துரைப்பாக்கம் வழியாக இடதுபுறம் திரும்பி, 200 அடி ரேடியல் சாலை வழியாக காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, பள்ளிக்கரணை - தாம்பரம் சாலையில் செல்லலாம்
மாம்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில், மாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் - பள்ளிக்கரணை நோக்கி செல்லும் வாகனங்கள், மேடவாக்கம் பாபு நகர் மூன்றாவது தெரு வழியாக வலது புறம் திரும்பி, நீலா நகர், விமலா நகர், நீல்கிரிஸ் கடை வழியாக இடது புறம் திரும்பி, வேளச்சேரி சாலை வழியாக தாம்பரம் செல்ல வேண்டும்
சித்தாலப்பாக்கத்தில் இருந்து, தாம்பரம் - பள்ளிக்கரணை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள், வேங்கைவாசல் பிரதான சாலை, சந்தோஷபுரம், வேளச்சேரி சாலை வழியாக இடதுபுறம் திரும்பி தாம்பரம் செல்ல வேண்டும்
தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து, வேளச்சேரி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலை, குரோம்பேட்டை, பல்லாவரம் மேம்பாலத்தில் வலதுபுறம் திரும்பி, 200 அடி சாலை வழியாக காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இடது புறம் திரும்பி, வேளச்சேரி செல்ல வேண்டும்
தாம்பரம் முதல் வேளச்சேரி சாலை, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., - ஜி.எஸ்.டி., சாலையில் இரும்புலியூர், ஜீரோ பாயின்ட் முதல் பல்லாவரம் வரையிலும், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை வரையிலும் கனரக வாகனங்களுக்கு, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

