/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலைகள், தெருக்கள் ஆக்கிரமிப்பால் திருக்கழுக்குன்றத்தில் முடங்கும் போக்குவரத்து
/
சாலைகள், தெருக்கள் ஆக்கிரமிப்பால் திருக்கழுக்குன்றத்தில் முடங்கும் போக்குவரத்து
சாலைகள், தெருக்கள் ஆக்கிரமிப்பால் திருக்கழுக்குன்றத்தில் முடங்கும் போக்குவரத்து
சாலைகள், தெருக்கள் ஆக்கிரமிப்பால் திருக்கழுக்குன்றத்தில் முடங்கும் போக்குவரத்து
ADDED : டிச 25, 2025 06:36 AM

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள முக்கிய சாலைகள், ஆக்கிரமிப்புகளால் குறுகி, வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
திருக்கழுக்குன்றம், தாலுகா, வட்டார வளர்ச்சி ஆகிய நிர்வாகங்களின் தலைமை இடமாக உள்ளது. சார் - பதிவாளர், பொதுப்பணி, வேளாண்மை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனை கள், பள்ளி - கல்லுாரிகள் ஆகி யவைகள் இயங்குகின்றன.
அரசின் நலதிட்ட சேவைகள், பிற தேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் வழிபட, பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
சதுரங்கப்பட்டினம் - திருத்தணி, திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலை மற்றும் கருங்குழி சாலை ஆகியவை, இப்பகுதியில் கடந்து செல்கின்றன. உள்ளூர், வெளியூர் வாகனங்கள், அரசுப் பேருந்துகள், இச் சாலையில் கடக்கின்றன.
நகரின் முக்கிய வர்த்தக பகுதிகள் இடையே, சாலைகள் கடந்து செல்கின்றன. தற்காலத்தில் போக்குவரத்து அதிகரிக்கும் சூழலில், சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகியுள்ளன. கடைகள் சாலை வரை அமைக்கப்பட்டுள்ளன.
பொருட்கள் வாங்க வருவோர், கடைகளின் முன்பும், அரசு அலுவலகங்கள், வங்கிகள், திருமண மண்டபம், கோவில் உள்ளிட்டவற்றுக்கு வருவோர், இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை, சாலையில்தான் நிறுத்துகின்றனர். 21 அடி அகலம் இருக்க வேண்டிய பிரதான சாலைகள், பல அடிகள் குறுகியுள்ளன.
இச்சிக்கலால், ஏராளமான வாகனங்கள் செல்லும் காலை, மாலை வேளையில், வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. எதிரெதிர் திசையில் செல்லும் வாகனங்கள் ஒதுங்க முடியாமல், சாலையில் தேங்கி நின்று, போக்குவரத்து முடங்குகிறது.
குறிப்பாக, திருமண காலத்தில், பெண் அழைப்பு வாகனங்கள் நீண்டநேரம் கடந்து, மற்ற வாகனங்கள் செல்ல இயலாமல், பல மணி நேரம் பாதிப்பு ஏற்படுகிறது. அவசர மருத்துவ ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை.
அரசு மருத்துவமனை உள்ள பக்தவச்சலேஸ்வரர் கோவில் சன்னிதி தெருவில், ஆம்புலன்ஸ் வாகனம் செல்லவோ, இச்சாலையில் இருந்து, பிரதான சாலைக்கு திரும்பவோ முடியாமல், சிக்கல் ஏற்படுகிறது.
பேருந்து நிலைய பகுதியில், மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட சாலைகள் சந்திப்பு, பக்தவச்சலேஸ்வரர் கோவில் பகுதியில், சன்னிதி தெரு சந்திப்பு, மார்க்கெட் பகுதியில், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சாலைகள் சந்திப்பு என, உள்ளன.
சந்திப்பு பகுதிகளில், வாகனங்கள் தாறுமாறாக திரும்புகின்றன. ஓட்டுநர்கள், சாலை விதிகளை அலட்சியப்படுத்தி, ஒரு சாலையில் இருந்து, மற்றொரு சாலையில் வேகமாக, வாகனத்தை திருப்புவதால், பிற வாகனங்கள் செல்ல முடியவில்லை.
ஒரே நேரத்தில், வெவ்வேறு சாலைகளில் இருந்து, வேறு சாலைக்கு திரும்பி, நெரிசலால் போக்குவரத்து முடங்குகிறது. சந்திப்பு பகுதிகளில், சிக்னல் அமைத்து அல்லது போலீசாரோ, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

