/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர்-- - பாளையூர் சாலையில் சோலார் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
/
செய்யூர்-- - பாளையூர் சாலையில் சோலார் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
செய்யூர்-- - பாளையூர் சாலையில் சோலார் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
செய்யூர்-- - பாளையூர் சாலையில் சோலார் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 25, 2025 06:37 AM

செய்யூர்: செய்யூர்- -பாளையூர் சாலை மின் விளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுவதால் சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவராஜபுரம் பகுதியில் இருந்து தண்ணீர் பந்தல் வழியாக பாளையூர் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது.
சாலையை தண்ணீர்பந்தல், பாளையூர், சித்தார்காடு, அமந்தங்கரணை என 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். தினமும் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பயணியர் என ஏராளமானோர் சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலையில் பல ஆண்டுகளாக மின் விளக்கு வசதி இல்லை. இரவு நேரத்தில் பெண்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அச்சப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையில் சோலார் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.