/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஈசூர் ஊராட்சிக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம்
/
ஈசூர் ஊராட்சிக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம்
ஈசூர் ஊராட்சிக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம்
ஈசூர் ஊராட்சிக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம்
ADDED : டிச 25, 2025 06:37 AM

சித்தாமூர்: ஈசூர் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாயில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
சித்தாமூர் அருகே ஈசூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.
நாளடைவில் கட்டடம் பழுதடைந்ததால், சில ஆண்டுகளுக்கு முன் இ - சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடத்தில், அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் நடத்த, போதிய இடவசதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாயிலாக, 30 லட்சம் மதிப்பில், ஊராட்சி அலுவலகம் அமைக்க டெண்டர் விடப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
புதிய ஊராட்சி அலுவலக கட்டடப்பணி கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

