/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல்
/
ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஏப் 13, 2025 03:19 AM

சிங்கபெருமாள் கோவில்:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான வண்டாலுார், சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான வெளி மாவட்டங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு இவர்களில் பெரும்பாலானோர் நேற்று மாலை சொந்த ஊர்களுக்கு கார், இருசக்கர வாகனங்களில் சென்றனர்.
மேலும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக ஜி.எஸ்.டி., சாலையில் திருச்சி மார்க்கத்தில் சிங்கபெருமாள்கோவிலில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் இருந்து 2 கி. மீ., துாரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ூ
இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

