/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பனிமூட்டத்தால் ஊர்ந்து சென்ற ரயில்கள் நீண்ட நேரம் 'கேட்'டை மூடியதால் அவதி
/
பனிமூட்டத்தால் ஊர்ந்து சென்ற ரயில்கள் நீண்ட நேரம் 'கேட்'டை மூடியதால் அவதி
பனிமூட்டத்தால் ஊர்ந்து சென்ற ரயில்கள் நீண்ட நேரம் 'கேட்'டை மூடியதால் அவதி
பனிமூட்டத்தால் ஊர்ந்து சென்ற ரயில்கள் நீண்ட நேரம் 'கேட்'டை மூடியதால் அவதி
ADDED : பிப் 08, 2025 12:56 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று அதிகாலை முதல் காலை 8:30 மணி வரை, கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி மாணவ -- மாணவியர், பணிக்குச் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள், கடும் அவதியடைந்தனர்.
வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
மேலும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த முக்கிய விரைவு ரயில்கள், தண்டவாளம் தெரியாததால் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டன.
வழக்கமாக 90- முதல் 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள், நேற்று 50 முதல்- 60 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டதாக, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதே போல, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களும், குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
இதன் காரணமாக ரயில்கள் அடுத்தடுத்து சென்றதால் சிங்கபெருமாள் கோவில், பேரமனுார், மறைமலைநகர் பகுதியில் உள்ள ரயில்வே 'கேட்'டுகள் 45 நிமிடங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தன.
இதில் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் நுாறுக்கும் மேற்பட்டோர், மறைமலைநகர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் சமாதானம் செய்து, போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.