/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூர் பஜாரில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
/
பவுஞ்சூர் பஜாரில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
பவுஞ்சூர் பஜாரில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
பவுஞ்சூர் பஜாரில் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : டிச 04, 2025 02:32 AM
பவுஞ்சூர்: பவுஞ்சூர் பஜார் பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், லத்துார் ஒன்றியத்தில் உள்ள பவுஞ்சூரில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் செயல்படுகின்றன.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
அத்துடன், பவுஞ்சூர் பஜார் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
பச்சம்பாக்கம், திருவாதுார், பவுஞ்சூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல, பவுஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பவுஞ்சூர் வழியாக மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, 15க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் ஏராளமானோர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், வெயில் மற்றும் மழைக் காலத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக முதியோர் மற்றும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் பவுஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

