/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்ப குன்றுகளில் மழைநீரில் பயணியர் சறுக்கல்
/
மாமல்லை சிற்ப குன்றுகளில் மழைநீரில் பயணியர் சறுக்கல்
மாமல்லை சிற்ப குன்றுகளில் மழைநீரில் பயணியர் சறுக்கல்
மாமல்லை சிற்ப குன்றுகளில் மழைநீரில் பயணியர் சறுக்கல்
ADDED : நவ 17, 2024 07:33 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடவரைகள் உள்ளன. இதை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சிற்பங்கள் அமைந்துள்ள பாறை குன்றுகள், சமதளமாக இன்றி கரடு முரடான, ஆபத்தான நிலையில் உள்ளன. பயணியர் சாதாரணமாக நடந்தாலே, பாறையில் தவறி விழுகின்றனர்.
மழையின்போது, குன்றுகளில் மழைநீர் பெருக்கெடுக்கிறது. அங்கு நீண்டநேரம் தேங்கி வழிகிறது. பயணியர் பாறைகளில் ஏறும்போதும், நடக்கும்போதும், கவனக்குறைவு காரணமாக பாறையிலிருந்து தவறி விழுகின்றனர்.
இந்திய மற்றும் சர்வதேச பயணியர் பலர் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். தற்போது அடிக்கடி மழை பெய்யும் சூழலில், பயணியர் பாறை குன்றில் ஏறுவதை, தொல்லியல் துறையினர் தடுக்க, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.