/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வனப்பகுதிக்கு தீ வைக்கும் மர்ம நபர்களால் மரங்கள் நாசம்
/
வனப்பகுதிக்கு தீ வைக்கும் மர்ம நபர்களால் மரங்கள் நாசம்
வனப்பகுதிக்கு தீ வைக்கும் மர்ம நபர்களால் மரங்கள் நாசம்
வனப்பகுதிக்கு தீ வைக்கும் மர்ம நபர்களால் மரங்கள் நாசம்
ADDED : ஏப் 28, 2025 01:36 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் 17,057 ஹெக்டேர் பரப்பளவில் காப்பு காடுகள் உள்ளன.
இதில் மான், முயல், மயில் உள்ளிட்ட பல்வேறு அரிய உயிரினங்கள் உள்ளன. இந்த காப்பு காடுகளை பாதுகாக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல ஊரக வளர்ச்சி துறை சார்பில், அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் புதிதாக நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ளதால், பகல் மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் இங்குள்ள புதர்கள் மற்றும் மரங்களுக்கு தீ வைக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிகள் தீப்பிடித்து எரிகின்றன.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலங்களில் வனப்பகுதிக்கு தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. இது, தனி நபர்களின் தவறு தவிர இயற்கையாக தீப்பற்றி எரிவது இல்லை.
பொழுது போக்கு மற்றும் தற்காலிக சந்தோஷத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதி தீப்பற்றி எரிந்தால் தீயணைப்பு வாகனங்கள் செல்வது கூட பெரும் சாவாலானது.
இதனால் இயற்கை வளம் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமீபத்தில் காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் பல ஏக்கர் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வந்த மரங்கள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

