/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிவன் கோவில் கோபுரத்தில் வளரும் மரங்கள்
/
சிவன் கோவில் கோபுரத்தில் வளரும் மரங்கள்
ADDED : பிப் 05, 2025 12:37 AM

சிங்கபெருமாள்கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம் திருவடிசூலம் கிராமத்தில் பழமையான ஞானபுரீஸ்வர் சமேத கோவர்த்தனாம்பிகை கோவில் உள்ளது. சைவ குறவர்களில் ஒருவரான திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற இக்கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோவில் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரத்தில், ஆங்காங்கே அரச மரங்கள் வளர்ந்து, கோபுரத்தின் உறுதிதன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், வண்ணமயமாக காட்சியளித்த கோபுர சிற்பங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது.
எனவே, இரண்டு மாதங்களில் திருவிழா துவங்க இருப்பதால், கோபுரத்திற்கு வண்ணம் தீட்டவும், மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.