/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திரிபுரசுந்தரி ஆடிப்பூரம் நாளை மறுநாள் துவக்கம்
/
திரிபுரசுந்தரி ஆடிப்பூரம் நாளை மறுநாள் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2025 12:44 AM
திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு, ஆடிப்பூர உற்சவம் நாளை மறுநாள் துவங்கி, வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.
திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில், அம்பாளாக திரிபுரசுந்தரி அம்மன் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு ஆடிப்பூரம் உத்சவம், 10 நாட்கள் நடத்தப்படும்.
தற்போதும், நாளை இரவு, விக்னேஸ்வர பூஜை நடத்தி, நாளை மறுநாள் காலை கொடியேற்றப்படுகிறது. அம்பாள் தினமும் உத்சவ சேவையாற்றி, வீதியுலா செல்கிறார்.
மூன்றாம் நாள் உத்சவமாக, வரும் 21ம் தேதி, அம்பாள் அதிகார நந்தியில், வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவலம், ஏழாம் நாள் உத்சவமாக, வரும் 25ம் தேதி திருத்தேரில் உலா என செல்கிறார்.
வரும் 29ம் தேதி இரவு, மூலவர் அம்பாளுக்கு முழு மஹா அபிஷேகம், சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. பஞ்சமூர்த்தி சுவாமியர் எழுந்தருளுகின்றனர்.

