/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆரில் அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றியதால் அவதி
/
ஓ.எம்.ஆரில் அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றியதால் அவதி
ஓ.எம்.ஆரில் அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றியதால் அவதி
ஓ.எம்.ஆரில் அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றியதால் அவதி
ADDED : டிச 21, 2024 11:51 PM

சென்னை, ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. ஆறுவழிச் சாலையான இங்கு, மெட்ரோ ரயில் பணி நடப்பதால், நான்கு வழியாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
நான்கு வழியாக இருந்த இ.சி.ஆரில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம், ஆறுவழியாக மாற்றப்படுகிறது. ஆனால், இரவு நேரத்தில், இ.சி.ஆரில் கோவளத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்களை, அக்கரையில் இருந்து சோழிங்கநல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
நன்கு பழக்கப்பட்ட வாகன ஓட்டிகள், 300 மீட்டர் துாரத்தில் உள்ள யு - டர்னில் திரும்பி, மீண்டும் திருவான்மியூர் நோக்கி செல்கின்றனர்.
ஊருக்கு புதியவர்கள், மத்திய சென்னை, வடசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியைச் சேர்ந்தோர், சோழிங்கநல்லுார் நோக்கி செல்கின்றனர். அங்கிருந்து நாவலுார் நோக்கி, 150 மீட்டர் சென்று யு - டர்ன் செய்து, மீண்டும் துரைப்பாக்கம் நோக்கி சென்று, அங்கும் யு - டர்ன் செய்து, திருவான்மியூர், அடையாறு நோக்கி செல்கின்றனர்.
இதற்கு, 15 கி.மீ., சுற்ற வேண்டி உள்ளது. மெட்ரோ பணி மற்றும் சிக்னலில் காத்திருக்கும் நேரத்தை குறைக்க, பல இடங்களில் யு - டர்ன் அமைக்கப்பட்டது. ஆனால், அதில் திரும்பி எங்கெல்லாம் போக முடியும் என, அறிவிப்பு பலகை வைக்கவில்லை. மேலும், வார இறுதி நாட்களில், திடீர் யு - டர்ன் செய்து வாகனங்களை திருப்பி விடுகின்றனர்.
இதனால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைவதுடன், திசை மாறி சென்று, 'ஒன்வே' என, போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.