/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்து வழக்கில் லாரி டிரைவருக்கு ஒராண்டு சிறை
/
விபத்து வழக்கில் லாரி டிரைவருக்கு ஒராண்டு சிறை
ADDED : நவ 01, 2024 08:12 PM
செங்கல்பட்டு:விபத்து வழக்கில் மினி லாரி ஓட்டுனருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட் தீர்ப்பளித்தது.
சென்னை கந்தன்சாவடியைச் சேர்ந்தவர் கோபால், 45, இவரது மகன் வெங்கடேஷ், 17. இருவரும், 2009ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி, 'டி.வி.எஸ் எக்ஸ்சல் சூப்பர்' வாகனத்தில், கேளம்பாக்கம் தனியார் பெட்ரோல் வங்கி அருகில், சென்றனர். அப்போது பின்னால் வந்த மினி லாரி, கோபால் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில், கோபால், அவரது மகன் வெங்கடேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்களை,கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுராந்தகம், கரசங்கல் கிராமத்தைச் சேர்ந்த காண்டீபன், 27, என்ற ஓட்டுனரை கைது செய்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.
வழக்கில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், ஓட்டுனர் காண்டீபனுக்கு, ஒராண்டு சிறை தண்டனையும், 1,500 அபராதமும் கட்டத்தவறினால், மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி கடந்த 30ம் தேதி உத்தரவிட்டார்.