நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கீழ்நீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 30.
இவர், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், கீழவலம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி எதிரில், சிற்றுண்டி கடையில் சாப்பிடுவதற்காக, ஸ்பிளண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு, இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, வாகனம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, மதுராந்தகம் காவல் நிலையத்தில், செல்வம் புகார் அளித்தார், அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.