/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி வளாகத்தில் அராஜகம் வாலிபர்கள் இருவர் கைது
/
பள்ளி வளாகத்தில் அராஜகம் வாலிபர்கள் இருவர் கைது
ADDED : பிப் 09, 2024 10:42 PM
சென்னை:சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், 33. இவர் மீது, நான்கு குற்ற வழக்குகள் உள்ளன. இரு தினங்களுக்கு முன், ராஜாகடையிலுள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தன் மகளை அழைத்து வர சென்றார்.
அங்கு அவரை மடக்கிய மர்ம கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரஞ்சித்தை வெட்டிக் கொல்ல முயன்றனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய, திருவொற்றியூரைச் சேர்ந்த அரவிந்தன், 24, சுரேஷ், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ், 23, திருவொற்றியூரைச் சேர்ந்த சாய்கணேஷ், 22, ஆனந்த், 32, கோகுல், 24, ஆகிய நான்கு பேரும், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், ஏழாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன், சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களை, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, கொலை முயற்சிக்கான முழு காரணம் தெரியவரும் என, போலீசார் கூறினர்.