/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரியாணிக்கு பணம் தராமல் தகராறு செய்த இருவர் கைது
/
பிரியாணிக்கு பணம் தராமல் தகராறு செய்த இருவர் கைது
ADDED : மே 17, 2025 10:01 PM
பெருங்களத்துார்:பெருங்களத்துாரை அடுத்த நெடுங்குன்றத்தை சேர்ந்தவர் சலீம். அதே பகுதியில், பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
அங்கு, வட மாநிலத்தை சேர்ந்த இருவர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், சூடான பிரியாணி பார்சல் வேண்டும் என, கேட்டுள்ளார். கடையில் இருந்த ஊழியர், பிரியாணியை பார்சல் கட்டி கொடுத்துள்ளார்.
அந்த வாலிபர், ஜி.பே., வாயிலாக பணம் செலுத்துவது போல் பாவனை காட்டி விட்டு, அங்கிருந்து செல்ல முயன்றார்.
அப்போது, பிரியாணிக்கு பணம் கேட்ட ஊழியரை மிரட்டிய அந்த வாலிபர், தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பிரியாணியுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, நண்பர் ஒருவருடன் மீண்டும் கடைக்கு வந்த வந்த வாலிபர், கடை ஊழியரை சரமாரியாக தாக்கி, ஜி.பே., வாயிலாக பணம் செலுத்திவிட்டு சென்றார்.
இது தொடர்பாக, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில், கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், நெடுங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன், 29, அவரது நண்பர் பிரபு, 30, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.