/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா வைத்திருந்த இருவர் சிக்கினர்
/
கஞ்சா வைத்திருந்த இருவர் சிக்கினர்
ADDED : மார் 29, 2025 06:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபுஜி நாகக், 34, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவர், திருப்போரூர் அருகே தங்கி கட்டுமான பணி செய்து வந்தனர்.
மேற்கண்ட பகுதியில் திருப்போரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் மேற்கண்ட இருவரும் இருந்தனர். இருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். பைகளில், ஒரு கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.