ADDED : ஜன 16, 2025 07:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:திருவள்ளுவர் தினமான நேற்று முன்தினம், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த, சூலேரிக்காடு, கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை அருகில் உள்ள புதரில், மது விற்கப்படுவதாக, மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு போலீசார் சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த சரவணன், 31, குமார், 41, ஆகியோர் டாஸ்மாக் கடை மதுவை பதுக்கி வைத்து விற்பதை கண்டறிந்தனர். போலீசார், அவர்களை கைது செய்து, மூட்டையில் வைத்திருந்த, 96 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.