/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது
/
கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது
ADDED : அக் 03, 2025 07:34 PM
அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் அருகே, கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதுாரைச் சேர்ந்த அருள்ராஜ், 46, படாளம் அடுத்த பாத்துாரைச் சேர்ந்த பிரியதாசன், 21, ஆகிய இருவரும், நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தியன்று, தங்கள் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றுள்ளனர்.
இதுகுறித்த தகவலின்படி, அங்கு சென்ற அச்சிறுபாக்கம் மதுவிலக்கு போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர். அருள்ராஜிடமிருந்து 20 'குவார்ட்டர்' மற்றும் பிரியதாசனிடமிருந்து 26 'குவார்ட்டர்' மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது வழக்கு பதிந்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.