ADDED : பிப் 09, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி அ.தி.மு.க., வார்டு கவுன்சிலர் அன்பரசு, 27, கொலை வழக்கில், 13 பேரை காயார் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், கடந்த மாதம், மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சேலையூரைச் சேர்ந்த நந்தகுமார், 28, நெடுங்குன்றத்தைச் சேர்ந்த சேவுகரத்தினம், 23, ஆகியோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., சாய்பிரணீத், கலெக்டர் அருண்ராஜுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். போலீசார், அதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம், நேற்று முன்தினம் வழங்கினர்.