/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செயின் பறிக்க முயற்சி பெண் உட்பட இருவர் கைது
/
செயின் பறிக்க முயற்சி பெண் உட்பட இருவர் கைது
ADDED : ஜன 21, 2024 05:39 AM
திருப்போரூர்: திருப்போரூரை சேர்ந்தவர் தேவகி, 55. இவர், நேற்று முன்தினம், திருப்போரூர் -- நெம்மேலி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த ஆண், பெண் இருவர், தேவகியிடம் முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்தனர்.
உடனே, பைக்கில் அமர்ந்திருந்த பெண், தேவகியின் முகத்தில் ஸ்பிரே அடித்து, கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட தேவகி, அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்டார். அருகே இருந்தவர்கள் அப்பெண்ணை பிடித்து, திருப்போரூர் போலீசில் ஒப்படைத்தனர். உடன் வந்தவர் தப்பினார்.
விசாரணையில், அப்பெண் துரைப்பாக்கத்தை சேர்ந்த கலைச்செல்வி, 40, என்பதும், அவருடன் வந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன், 32, என்பதும் தெரிந்தது.
செல்போன் சிக்னல் மூலம், குமரேசனையும் பிடித்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

