/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லாரி-கார் மோதி இருவர் படுகாயம்
/
லாரி-கார் மோதி இருவர் படுகாயம்
ADDED : ஆக 03, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்,:முன்னால் சென்ற லாரியில் கார் மோதி, இருவர் படுகாயமடைந்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர்கள் அபிலாஷ், 30, தினேஷ் குமார், 27. இருவரும் மறைமலை நகரில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். நேற்று காலை இருவரும் மாருதி சுசுகி செலிரோயோ காரில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்றனர்.
காட்டாங்கொளத்துார் போக்குவரத்து சிக்னல் அருகில், முன்னே சென்ற லாரியை கடக்க முயன்றனர். அப்போது லாரியின் பின்புறத்தில் கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.