/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முகத்தில் சிகரெட் புகை தட்டிக்கேட்ட இருவருக்கு வெட்டு
/
முகத்தில் சிகரெட் புகை தட்டிக்கேட்ட இருவருக்கு வெட்டு
முகத்தில் சிகரெட் புகை தட்டிக்கேட்ட இருவருக்கு வெட்டு
முகத்தில் சிகரெட் புகை தட்டிக்கேட்ட இருவருக்கு வெட்டு
ADDED : ஜன 26, 2025 03:28 AM
மேடவாக்கம்:மேடவாக்கம், மூவேந்தர் தெருவைச் சேர்ந்தவர் அப்பு என்கிற பிரகாஷ், 29; 'ஏசி' மெக்கானிக். இவரது நண்பர்கள் சிவகுமார் மற்றும் கணேஷ்.
இவர்கள், நேற்று முன்தினம் இரவு வடக்கு பட்டு சாலையில் உள்ள தனியார் மது கூடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அங்கே, அருகில் ஜல்லடியன் பேட்டை, நெசவாளர் நகர், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம், 30, தியாகு, 31, ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அவர்கள் சிகரெட் புகைத்து, புகையை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது ஊதி உள்ளனர். இது குறித்து கேட்டதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தவிர, தன் நண்பர்கள் சதீஷ், சஞ்சய், திலீப் ஆகியோரை போன் செய்து வரவழைத்தனர். அவர்கள் வந்த உடன், எடுத்து வந்த கத்தியால் பிரகாஷ் மற்றும் சிவகுமாரை வெட்டி விட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேடவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

