/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'ராபிடோ' பைக் மீது கார் மோதி இரண்டு பேர் பரிதாபமாக பலி
/
'ராபிடோ' பைக் மீது கார் மோதி இரண்டு பேர் பரிதாபமாக பலி
'ராபிடோ' பைக் மீது கார் மோதி இரண்டு பேர் பரிதாபமாக பலி
'ராபிடோ' பைக் மீது கார் மோதி இரண்டு பேர் பரிதாபமாக பலி
ADDED : ஆக 19, 2025 12:22 AM
தாம்பரம், தாம்பரம் அருகே, 'ராபிடோ' இருசக்கர வாகனம் மீது, அடையாளம் தெரியாத கார் மோதி, இருவர் பரிதாபமாக பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 22; குரோம்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து, நண்பர்களுடன் தங்கியிருந்தார். தாம்பரம் மேம்பால அணுகு சாலையை ஒட்டியுள்ள தனியார் இன்ஸ்டிடியூட்டில் அரசு வேலைக்காக படித்து வந்தார்.
நேற்று முன்தினம் படிப்பதற்காக சென்ற பாலமுருகன், நேற்று அதிகாலை 2:40 மணிக்கு அறைக்கு செல்வதற்காக, ராபிடோ இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்தார். திருவள்ளுர் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ், 48, என்பவர், பாலமுருகனை தாம்பரத்தில் ஏற்றினார்.
இருவரும் குரோம்பேட்டை நோக்கி சென்றனர். தாம்பரம் சானடோரியம், ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், பலத்த காயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், படுகாயமடைந்த பவுல்ராஜை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பவுல்ராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.