/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவர் கைது
/
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவர் கைது
ADDED : அக் 17, 2024 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:கீரப்பாக்கம் கல் குவாரி அருகே, காட்டுப் பகுதியில், நேற்று காலை காயார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு கத்திகளுடன் இருவர் பதுங்கி இருந்தனர்.
அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றனர். உடனே, அவர்களை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், 20, மாதவன், 20, என்பதும், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட, ஆயுதங்களுடன் சுற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.