/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குட்கா பறிமுதல் இருவருக்கு 'காப்பு'
/
குட்கா பறிமுதல் இருவருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 13, 2025 08:31 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த புது மாம்பாக்கம், சூனாம்பேடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, 42.
திருவண்ணாமலை மாவட்டம், டி.கல்லேரி கிராமம், நாராயணன்பட்டு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35.
இவர்கள் இருவரும் நேற்று, புது மாம்பாக்கத்தில் உள்ள முனியாண்டிக்குச் சொந்தமான பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் வைத்து விற்பனை செய்வதாக, மதுராந்தகம் போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அப்பகுதிக்குச் சென்ற போலீசார், பெட்டிக்கடையில் இருந்து, 5,000 ரூபாய் மதிப்பிலான, 7 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின், வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.