/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பேருந்து மோதி இருவர் படுகாயம்
/
அரசு பேருந்து மோதி இருவர் படுகாயம்
ADDED : அக் 25, 2025 09:49 PM
பவுஞ்சூர்:தச்சூரில் அரசு பேருந்து மோதி இருவர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து தடம் எண் டி-4 அரசு பேருந்து ,நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தச்சூருக்கு வந்தது. பேருந்தை டிரைவர், ராயப்பன், 52 இயக்கினார். பேருந்து, தச்சூர் கூட்ரோடு அருகே வந்து பயணியரை இறக்கி விட்டது.
பேருந்தை திருப்புவதற்கு அருகே இருந்த காலி மைதானத்தில் ஓட்டுநர் பேருந்தை பின்பக்கமாக இயக்கினார்.
அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த, ஜான் பீட்டர், 33, எடிசன், 29 என்பவர்கள் மீது, பேருந்து மோதியது. இதில், இருவரும், கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விபத்து குறித்து, அணைக்கட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

