/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் லாரி மோதி இருவர் படுகாயம்
/
செய்யூரில் லாரி மோதி இருவர் படுகாயம்
ADDED : ஏப் 08, 2025 06:20 PM
செய்யூர்:செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 38.
இவர், நேற்று முன்தினம் இரவு தன் 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், நண்பரான பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், 44, என்பவருடன், செய்யூரில் இருந்து எல்லையம்மன் கோவில் நோக்கிச் சென்றார்.
இரவு 9:30 மணியளவில் கழிவெளி அருகே சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி, இவரது இருசக்கர வாகனத்தின் மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில், சசிகுமாரின் வலது கால் மற்றும் வலது கை முறிந்துள்ளது. சுரேஷுக்கு, தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின், செய்யூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.