/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூரில் டூ - வீலர் திருட்டு
/
சித்தாமூரில் டூ - வீலர் திருட்டு
ADDED : டிச 14, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர், சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா 30; டிரைவர்.
நேற்று முன்தினம் இரவு தன், 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை வீட்டின் எதிரே நிறுத்தி விட்டு, வீட்டில் துாங்கி உள்ளார்.
நேற்று காலை 5:00 மணியளவில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தில் தேடினார்.
எங்கு தேடியும் கிடைக்காததால், சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, சித்தாமூர் போலீசார் விசாரிக்கின்றனர்.