/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை இருளர்களுக்கு நிவாரணம் வழங்கிய உதயநிதி
/
மாமல்லை இருளர்களுக்கு நிவாரணம் வழங்கிய உதயநிதி
ADDED : டிச 02, 2024 02:22 AM

மாமல்லபுரம்,:வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல், நேற்று முன்தினம் இரவு, கரையை கடந்தது. இதனால் கனமழை பெய்தது.
மாமல்லபுரம், கொக்கிலமேடு, வாயலுார் ஆகிய பகுதிகளில், மழைநீர் சூழும் பகுதிகளில் வசித்த இருளர்களை, வருவாய் துறையினர் முகாம்களில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
மாமல்லபுரத்தில், பேரூராட்சி சமுதாயக்கூடத்தில், 65 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று, துணை முதவல்வர் உதயநிதி, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோருடன், அவர்களை சந்தித்தார்.
தலா 5 கிலோ அரிசி, பிரிஞ்சி சாதம், பிரெட், பாய், போர்வை ஆகியவை வழங்கினார். அதன்பின், மருத்துவ முகாமை பார்வையிட்டார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.