/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏர்போர்ட்டில் போதையில் ரகளை உக்ரைன் பெண்ணின் பயணம் ரத்து
/
ஏர்போர்ட்டில் போதையில் ரகளை உக்ரைன் பெண்ணின் பயணம் ரத்து
ஏர்போர்ட்டில் போதையில் ரகளை உக்ரைன் பெண்ணின் பயணம் ரத்து
ஏர்போர்ட்டில் போதையில் ரகளை உக்ரைன் பெண்ணின் பயணம் ரத்து
ADDED : ஜன 12, 2025 02:24 AM
சென்னை,
சென்னையில் இருந்து, 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ்' நகரான துபாய் செல்லும் 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று காலை புறப்பட தயாரக இருந்தது.
அதில் பயணம் செய்ய வந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பிராவின்டோர்ப், 51, என்ற பெண் பயணி, பாதுகாப்பு சோதனைக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது சக பயணியிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் உக்ரைன் நாட்டு பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால் அவர் பாதுகாப்பு போலீசாரையும் தரைகுறைவாக பேசி உள்ளார்.
தொடர்ந்து பெண் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் பேசியபோது, போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டில் கஞ்சா பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.
தலைக்கெறிய போதையில் பயணம் செய்ய அனுமதிப்பது பாதுகாப்பானது அல்ல என முடிவு செய்த அதிகாரிகள், முனையம் - 2 புறப்பாடு பகுதியிலிருந்து அவரை வெளியேற்றினர்.
இதனால் மனமுடைந்த உக்ரைன் நாட்டு பெண் பயணி, 2வது தளத்தில் இருந்து கீழே குதிக்க முற்பட்டார்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போதை தெளிந்த பின், வேறு விமானம் வாயிலாக அவருடைய நாட்டிற்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் உக்ரைன் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு, பிராவின்டோர்ப் சுற்றுலா பயணியர் விசாவில் வந்தது குறிப்பிடத்தக்கது.

