sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்...இழுபறி!:டெண்டர் எடுக்க யாரும் முன்வராததால் சிக்கல்

/

செங்கையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்...இழுபறி!:டெண்டர் எடுக்க யாரும் முன்வராததால் சிக்கல்

செங்கையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்...இழுபறி!:டெண்டர் எடுக்க யாரும் முன்வராததால் சிக்கல்

செங்கையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்...இழுபறி!:டெண்டர் எடுக்க யாரும் முன்வராததால் சிக்கல்


ADDED : ஜூலை 28, 2024 02:10 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, மத்திய - மாநில அரசுகள், 188 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. ஆனால், கட்டுமானப் பணியை செயல்படுத்த, 'டெண்டர்' எடுக்க யாரும் முன்வராததால், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் இழுபறி நீடிக்கிறது.

தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 2001ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சியும் தேர்வு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு முதல் நிலை நகராட்சியில், 6.09 ச.மீ., பரப்பளவில் 33 வார்டுகள் உள்ளன. அதில், 61.467 கி.மீ., நீளம் சாலைகள் மற்றும் 62.67 கி.மீ., நீளத்தில் வடிகால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, பெரியணியக்கார தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், குண்டூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 485 தெருக்கள் உள்ளன.

நகராட்சி மேற்கு பகுதி மேடாகவும், கிழக்கு பகுதியில் கொளவாய் ஏரி தாழ்வாகவும் அமைந்துள்ளது. மழைநீர் வடிகால்வாய் வாயிலாக, பல ஆண்டுகளாக மழைநீர் கொளவாய் ஏரிக்கு செல்கிறது.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால்வாய்களில் விடப்படுகிறது.

இதனால், கொசு உற்பத்தி பெருகி, நகரவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. மழைநீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர், கொளவாய் ஏரியில் கலக்கிறது.

இங்கிருந்து செல்லும் கழிவுநீர், பாலாற்றுக்கு சென்றடைகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, நீண்டகாலமாக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள், 2020ம் ஆண்டு பிப்., மாதம் 194 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்து அரசுக்கு அனுப்பினர்.

அதன்பின், அதே ஆண்டு திருத்திய திட்ட மதிப்பீடாக, 165.44 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

அதன்பின், 2022ம் ஆண்டு, செப்., மாதம், 220.74 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அதே டிசம்பர் மாதம், சட்டசபையில், 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.

அதன்பின், பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 2023- - 24ம் நிதியாண்டில், 206.18 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது.

கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி, திருத்திய மதிப்பீடாக, 188.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.

இத்திட்டத்தில், மத்திய அரசு 'துாய்மை இந்தியா 2.0' திட்டத்தில், 63 கோடி ரூபாயும், தமிழ்நாடு அர்பன் டெவலப்மென்ட் வங்கிக்கடன் வாயிலாக, 62.48 கோடி ரூபாயும், தமிழக அரசு 62.47 கோடி ரூபாயும் என, மொத்தம் 188.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இப்பணிகளை செயல்படுத்த, கடந்த ஆண்டு டிச., 29ம் தேதி, நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பாதாள சாக்கடை திட்டப்பணி விரைவில் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், கொளவாய் ஏரி மற்றும் பாலாற்றில் கழிவுநீர் செல்வது முற்றிலும் தடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு 45 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் வடிகால்வாய்களில் செல்வது முற்றிலும் தடுக்கப்படும்.

தனிமனித சுகாதாரம், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு, கடந்த மார்ச் மாதம் 'டெண்டர்' விடப்பட்டது.

டெண்டர் எடுக்க யாரும் வராததால், கட்டுமானப் பணிகளை துவக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைந்து துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 188.25 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளை செயல்படுத்த, நகரசபை அனுமதி அளித்துள்ளது. இப்பணிக்கு, மூன்றாவது முறையாக, வரும் ஆக., மாதம் 'டெண்டர்' விடப்பட உள்ளது. டெண்டர் முடிந்தவுடன் கட்டமைப்பு பணிகள் துவக்கப்படும்.

- தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள்,

காஞ்சிபுரம் மாவட்டம்.






      Dinamalar
      Follow us