/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழியில் சமதளமற்ற சாலை வாகன ஓட்டிகள் திணறல்
/
கருங்குழியில் சமதளமற்ற சாலை வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஏப் 22, 2025 12:07 AM

மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் சமதளமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து அச்சிறுபாக்கம் ஆத்துார் சுங்கச்சாவடி வரை, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த சில மாதங்களாக, சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
பழைய சாலையை பெயர்த்து, புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
அதில், சாலை பெயர்த்து எடுக்கப்பட்ட பகுதிகளில், முழுமையாக புதிதாக தார் கலவையை நிரப்பாமல், ஆங்காங்கே விடுபட்டுள்ளது.
அதில் மாமண்டூர், கக்கிலப்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு பகுதிகளில் சாலை பணியை முழுமையாக முடிக்காமல், ஆங்காங்கே விடுபட்டுள்ளது.
அதனால், புறவழிச் சாலையையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை உடன் இணையும் பகுதிகளில், சாலைகள் மேடு பள்ளமாக உள்ளது.
இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்கின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், சாலை பணியை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.