/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலையில் ஒளிராத விளக்குகள் சிங்கபெருமாள்கோவிலில் அச்சம்
/
நெடுஞ்சாலையில் ஒளிராத விளக்குகள் சிங்கபெருமாள்கோவிலில் அச்சம்
நெடுஞ்சாலையில் ஒளிராத விளக்குகள் சிங்கபெருமாள்கோவிலில் அச்சம்
நெடுஞ்சாலையில் ஒளிராத விளக்குகள் சிங்கபெருமாள்கோவிலில் அச்சம்
ADDED : பிப் 12, 2025 01:06 AM

மறைமலைநகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை, தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.
மேலும் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் பகுதிகளைச் சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த வழியாக இருசக்கர வாகனம், கார், லாரி, பேருந்து வாயிலாக சென்று வருகின்றனர்.
இந்த சாலை நடுவே மையத்தடுப்பில், வாகன ஓட்டிகள் வசதிக்காக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி, விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் உள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக வெறும் காட்சிப்பொருளாக பயனற்ற நிலையில் உள்ளன. இருள் சூழ்ந்த சாலையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு மருத்துவ செலவு, வாகன பழுது நீக்க செலவுகளை சந்திப்பதோடு, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெரும் விபத்துகள் ஏதும் ஏற்படும் முன், மின் விளக்குகளை பழுது நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.