/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கத்தில் அகற்றப்படாத பேனர் குப்பையால் வாகன ஓட்டிகள் அவஸ்தை
/
ஊரப்பாக்கத்தில் அகற்றப்படாத பேனர் குப்பையால் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ஊரப்பாக்கத்தில் அகற்றப்படாத பேனர் குப்பையால் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ஊரப்பாக்கத்தில் அகற்றப்படாத பேனர் குப்பையால் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : அக் 04, 2024 01:54 AM

கூடுவாஞ்சேரி:தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், சிக்னல் அருகில் அரசியல் கட்சியினரின் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதன் அருகிலேயே இறைச்சி, மீன் மற்றும் ஹோட்டல்களில் சேகரமாகும் குப்பை கொட்டப்பட்டு, நீண்ட நாட்களாக தேக்கமடைந்தும், தற்போது பெய்த மழையில் நனைந்து, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
இப்பகுதியில், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலை மற்றும் காரணைப்புதுச்சேரி பிரதான சாலை போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் நடைபாதை கடை உரிமையாளர்கள் மற்றும் இறைச்சி மீன் கடைகள் வைத்திருப்போர், தங்கள் கடைகளில் சேகரமாகும் குப்பையை, இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
அவ்வாறு கொட்டப்படும் குப்பை, நீண்ட நாட்களாக தேக்கமடைந்துள்ளது. மேலும், அந்த இடத்தில் கால்நடைகள் குப்பையை கிளறியபடி, மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு, சாலையின் குறுக்காக ஓடுகின்றன.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் குப்பையை அகற்றவும், சாலைகளில் இரவு நேரங்களில் குப்பையை கொட்டும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.