/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீரமைக்கப்படாத ஓங்கூர் ஆற்றின் கரைகள் தாழ்வான கிராமங்களில் வெள்ள அபாயம்
/
சீரமைக்கப்படாத ஓங்கூர் ஆற்றின் கரைகள் தாழ்வான கிராமங்களில் வெள்ள அபாயம்
சீரமைக்கப்படாத ஓங்கூர் ஆற்றின் கரைகள் தாழ்வான கிராமங்களில் வெள்ள அபாயம்
சீரமைக்கப்படாத ஓங்கூர் ஆற்றின் கரைகள் தாழ்வான கிராமங்களில் வெள்ள அபாயம்
ADDED : ஜூலை 14, 2025 12:55 AM

சித்தாமூர்:சித்தாமூர், விளாம்பட்டு அருகே, ஓங்கூர் ஆற்றின் கரைகள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளதால், மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தாழ்வான கிராமங்களில் வெள்ள நீர் சூழும் அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கும் பிரதான எல்லைப் பகுதியாக, ஓங்கூர் ஆறு உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓங்கூர் கிராமத்தில் இருந்து ஓங்கூர் ஆறு உற்பத்தியாகி, 40 கி.மீ., துாரம் பயணம் செய்து மரக்காணம் அருகே கழிவெளியுடன் இணைந்து, வங்கக்கடலில் கலக்கிறது.
இது மொத்தம், 1,480 சதுர கி.மீ., பரப்பளவு நீர்ப்பிடிப்பு பகுதிகளைக் கொண்டுள்ளது.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும் இந்த ஆற்றில், கடந்தாண்டு பருவமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சித்தாமூர் அருகே வன்னியநல்லுார், விளாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கரைகள் உடைந்தன.
இதனால் புதுப்பட்டு, விளாம்பட்டு, புதுக்குடி, வெள்ளகொண்டகரம், புதுப்பேட்டை, மண்டகப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின.
பல நாட்களாக பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி தவித்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு பருவமழையின் போது சேதமடைந்த ஆற்றின் கரைகள், தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் இந்தாண்டும் பருவமழையின் போது, தாழ்வான கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள கரைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.