தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பயன்பாடின்றி கிடக்கும் மைதானங்கள் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

பயன்பாடின்றி கிடக்கும் மைதானங்கள் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

பயன்பாடின்றி கிடக்கும் மைதானங்கள் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி


ADDED : செப் 29, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறைமலைநகர், செப். 30-–

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி மைதானங்களை சீரமைத்து குழந்தைகள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என, சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் மதுராந்தகம், செங்கல்பட்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன.

அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர்‌, லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார் மலை என வட்டார வாரியாக மாவட்டத்தில் 481 தொடக்கப்பள்ளி, 188 நடுநிலைப்பள்ளி, 65 உயர்நிலைப் பள்ளி, 80 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 814 பள்ளிகள் உள்ளன.

இதில், பெரும்பாலான‌ பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் முறையான பராமரிப்பின்றி சீர்குலைந்து உள்ளது. இதனால், மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதில் உடற்கல்வி ஆசியர்களுக்கு சவலான பணியாக இருக்கிறது. விளையாட்டு மீதான ஆர்வம் குறைந்து, தவறான வழிகளில் செல்லவும் வழி வகுக்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மை தானங்கள் பயன்பாடின்றி செடி, கொடிகள் வளர்ந்து வீணாகி வருகிறது.

இதன் காரணமாக குழந்தைகள் முறையாக விளையாட்டு பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அனுமந்தபுரம் உயர்நிலைப் மைதானத்தில் பாறைகள் மற்றும் கற்கள் நிறைந்து காணப்படுவதால், மாணவ – மாணவியர் விளையாடும் போது கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.

பல பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் துருப்பிடித்து மண்ணோடு மண்ணாக மட்கி கிடக்கின்றன. இதனை காரணம் காட்டி ஆசிரியர்கள் விளையாட்டு நேரத்தில் மாணவ -– மாணவியரை அனுமதிப்பது இல்லை.

மேலும் மைதானங்கள் புதர் மண்டி உள்ளதால் விஷ ஜந்துக்களின் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனைத்து பள்ளிகளை ஆய்வு செய்து மைதானங்களை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us