/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுச்சுவர் அமைக்கப்படாத வேளாண் கூட்டுறவு வங்கி
/
சுற்றுச்சுவர் அமைக்கப்படாத வேளாண் கூட்டுறவு வங்கி
ADDED : நவ 18, 2024 03:44 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பெரிய கயப்பாக்கம் கிராமத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இதில், பேட்டை, சின்னகயப்பாக்கம், பெரியகயப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், மத்திய, மாநில மற்றும் நபார்டு நிதி வாயிலாக விவசாயக் கடன், இடுபொருட்களான உரங்கள் வினியோகம், சிறு தவணை மற்றும் நடுத்தர தவணை கடன், நகை கடன், கால்நடை கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் தானியக் கிடங்கு உள்ளது. இந்த வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
மேலும், அருகே உள்ள வயல்வெளியில் இருந்து, விஷப்பூச்சிகள் நடமாட வாய்ப்பு உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.